(ஜுனைட்.எம்.பஹ்த்)
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் ஆறாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2016.04.24 ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் அல்ஹாபிழ் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதிஹ் நிறுவனத்தின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் அக்ரம் அப்துஸ்ஸமத் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி, சிரேஸ்ட எழுத்தாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம் ஹனீபா, சி.டி.ஆர் நிறுவன தலைவர் சகோதரர் சிராஜ் மஷ்ஹுர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞன பீட விரிவுரையாளர் சகோதரர் எம்.ஏ.ஏ பஹீஜ், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி ஏ. எம். அப்துல் காதர் (பலாஹி), மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எச்.எம் ஆசாத் ஹஸன், மட்/ அமீர் அலி வித்தியாலய ஆசிரியர் ஏ.எல்.எம் சிப்லி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர் சகோதரர் ஏ.என்.எம் ரிழா, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் சகோதரர் எம்.செட் அஹமத் ஸக்கி மற்றும் உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள் , பெற்றோர்கள் என
பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மாணவ மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பாடசாலை கீதம் , உரையாடல், அஸ்மாஉல் ஹுஸ்னா அறபுப்பாடல், கஸீதாக்கள், சிறுவர் நாடகம், பிஸ்மி ஜீனியஸ் மற்றும் சிறுவர் மாநாடு, மாணவர்களின் அல்குர்ஆன்
திலாவத்தை பிரதிபலிக்கும் Bismi Reciter போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ, விஷேட அதிதிகளினால் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் 70 மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













