(எம்.ரி.எம்.யூனுஸ்)
மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்திய முத்தமிழ் விழாவும் தேனகம் சிறப்பு மலர் வெளியீடும் இன்று 05.04.2016 மட்/ மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் பிரதேச செயலாளரும் கலாசாரப்பேரவைத் தலைவருமான திரு.வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் கலாசாரப் பேரவையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.










