நிலாவௌி - பரேவ் தீவுக்கு அருகில் பவளப் பாறைகளை பார்வையிடச் சென்ற 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பவளப் பாறைகளை பார்வையிடச் சென்ற 13 மாணவர்களில் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு நிலாவௌி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, களுவாஞ்சிக்குடி - ஒந்தாச்சிமடம் கடற்பகுதியில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் நீர்கொழும்பு - கெபும்கொட கடலில் மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அவர்களில் 17 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து இவரைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

