சிறுநீரக கடத்தல்; கைதானவர்களிடம் இந்திய வைத்தியர்களின் கடிதங்கள் மீட்பு

Written By avathani Media Network on Thursday, April 7, 2016


சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளிடமிருந்து இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன சந்தேகநபர்களிடம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆவணங்களின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இவர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டமை உறுதி செய்யப்படுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.