(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்)
இன்று காலை நிந்தவூர் அட்டப்பளம் பிரதான வீதி பெரிய பாலத்தில் தனியார் பேருந்தும், வீரகேசரி பத்திரிகைக்கு சொந்தமான லொறியும் மோதியதில் மூண்றுபேர் பலத்த காயங்களுக்குள்ளானதில் அவர்களை அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
தனியார் பேருந்தானது மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீரகேசரி பத்திரிகைக்கு சொந்தமான லொறியானது அக்கறைபற்றிலிருந்து வந்துகொண்டிருந்த போதே பேருந்தும்,லொறியும் ஒன்றுடனொன்று நேருக்குநேர் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இவ்விபத்து தொடர்பாக சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.





