மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வாழ்வதார உதவி..

Written By avathani Media Network on Monday, April 4, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீதிக்கு ஒருநாள் என்ற தொனிபொருளில் மக்கள் இல்லம் நாடிச்சென்று அவர்களின் குறைகளை கேட்டறிகின்ற நடமாடும் சேவையின் போது புதிய காத்தான்குடி றிஸ்வி நகரைச் சேர்ந்த மீன்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுகின்ற இரண்டு வியாபாரிகள் தமது தொழிலினை விருத்தி செய்வற்கான வாழ்வாதார உதவிகளை கேட்டிருந்தனர்,

அவர்களின் வேண்டுகோளினை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக, மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் மீன் வியாபாரத்தினை மேற்கொண்டு அவர்களது வாழ்வினை வளம்பெறச்செய்வற்காக 40,000.00 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள், தராசுகள், மற்றும் கத்திகள் மிக அண்மையில் அவர்களது இல்லம் நாடிசென்று அவர்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அப்பிரதேச மக்களுடன் மகிழ்ச்சிகரமாக கலந்துரையாடியதுடன் அவர்களது இல்லங்களுக்கு சென்று அவர்களது தேவைகளை கேட்டறிந்ததுடன், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஐஸ்க்ரீம் வழங்கி தானும் அவர்களுடன் சேர்ந்து உண்டுமகிழ்ந்தார்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.