மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சிப்லி பாறூக் (MPC) இன் உதவி

Written By avathani Media Network on Wednesday, March 30, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயதிற்குற்பட்ட மாங்கேணி
மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க விஜயமொன்றை கடந்த பெப்ரவரி மாதம் (23.02.2016) மேற்கொண்டு பாடசாலையின் நிலைமைகளை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கண்டறிந்தார்,

அதன்போது இப்பாடசாலையின் அதிபர் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார் அதன் பிரகாரம் உடனடி தேவைகளாக இருந்த, இம்முறை புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒரு வருடத்திற்குப் போதுமான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினையும், இம்முறை க.பொ.த. சாதாரணதர (தரம்-11) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினையும் அத்துடன் கணணி பிரிண்டர் இயந்திரமொன்றினையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாகவும் வாக்குறிதியளிதார். 

அதன் பிரகாரம் செவ்வாய்கிழமை (29.03.2016) அன்று பாடசாலைக்கு பிரிண்டர் இயந்திரமொன்றினையும், புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் போதுமான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்புக்களும், க.பொ.த. சாதாரணதர (தரம்-11) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்புக்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் பிரதிநிதி ஆசிரியர் அல்பியாஸ் முஹமத் ஊடக பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் கலந்துசிறப்பித்தனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.