மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தலவத்துக்கொடை -மாதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான எம்.ஆர்.எஸ்.வீ நுகவெல என்ற குறித்த நபர் இன்று காலை வைத்தியசாலையின் 12 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து குறித்த வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தவர் என்றும், தற்போது இவரது சடலம் தற்போது தேசிய
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

