மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாடல்

Written By avathani Media Network on Saturday, March 26, 2016


மின் உற்பத்தித் துறையில் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான யோசனைகளை விரைவில் முன்வைக்குமாறு கோப் குழு மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. 

அண்மையில் மின்சார சபை அதிகாரிகளை முதல் தடவையாக கோப் குழு சந்தித்திருந்ததாக குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார். 

அதன்போது தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார். 

மின்சார நெருக்கடிக்காக விரைவான யோசனைகளை திட்டமிடுமாறு மின்சார சபை அதிகாரிகளுக்கு கோப் குழு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார். 

இதேவேளை மின்சார குளறுபடிகள் சம்பந்தமாக விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை தற்சமயம் ஆரம்பித்திருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.