காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில்-மூன்று நாள் கல்விக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-படங்கள்.

Written By avathani Media Network on Wednesday, March 9, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் மூன்று நாள் கல்விக் கண்காட்சி இன்று 09-03-2016 புதன்கிழமை காலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எல்.கபூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கல்விக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலியினால் இக் கல்விக் கண்காட்சி நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்,காண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 17 கண்காட்சிக் கூடங்களும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

இக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முகாமைத்துவ பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை,நகர அபிவிருத்திஇ நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் உட்பட கல்வியலாளர்கள்,புத்திஜீவிகள்,பாடசாலைகளின் அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் ,மெத்தைப் பள்ளி வித்தியால ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று 09-03-2016 புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த கல்விக் கண்காட்சி இன்று தொடக்கம் 11-03-2016 வெள்ளிக்கிழமை வரையிலான திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தற்போதய இளைய மாணவர் சமூகம் இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில்கல்வி,சுகாதாரம்,விஞ்ஞானம்,தொலைத்தொடர்பு,இஸ்லாமிய வரலாறு,கிராமிய கலாசாரம் ,தொழிநுட்ப சாதனங்கள்,வாசிப்பு ஊக்குவிப்பு,தபால்,பழைய புதிய நாணயங்கள் ,விவசாயம்,விமான சேவை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக் கல்விக் கண்காட்சியை மாணவர்கள் பார்வையிடுவதற்கு 10.00ரூபாவும் வெளி நபர்கள் பார்வையிடுவதற்கு 30.00 ரூபாவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





























Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.