காரீயம் சுரங்க தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Written By avathani Media Network on Thursday, March 31, 2016


(இக்பால் அலி)

தொடங்கஸ்லந்த கஹட்டகஹப் பகுதியில் அமைந்துள்ள காரீயம் சுரங்க தொழிற்சாலை ஊழியர்கள் தங்களுடைய மேலதிகக் கொடுப்பனவை வழங்கக் கோரி 29-30 ஆகிய இருநாட்கள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தம்முடைய 15000.00 ரூபா கொடுப்பனவை வழங்கக் கோரி இந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த உண்ணாவிரப் போரட்டத்தில் ஈடுபட்ட சிலர் நோய் வாய்ப்புக்கு உட்பட்டதால் ரிதிகம மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஊழியர்கள் 1132 அடி ஆழத்திலிருந்து கொண்டு மேலதிக கொடுப்பனவைக் கோரியே இங்கு பணியுரிம் 70 ஊழியர்கள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர். தம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மேலும் 2000 ஆடி ஆழத்திலிருந்து உண்ணா விரதப் போராட்டத்தைத் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும்; ஸ்ரீலங்கா சுந்திர காரீய சுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அஜித் ரத்ன திலக எச்சரிக்கை விடுத்திருந்தார்..

இவ்விடயம் தொடர்பாக ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்ப நிறுவனத்தின் தலைவருக்கும் சங்கத்தினருக்கும் இணக்கப்பாடு கிட்டியதை அடுத்து இந்த உண்ணா விரதம் ஆர்ப்பாட்டம் நேற்று கைவிடப்பட்டது.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.