-எம்.எல்.எம்.அன்ஸார்
மரங்கள் கல்யாணம் பண்ண
விரும்புகிற மாப்பிள்ளை
மழை!
*
ஒரு ஃபோன் கூட பண்ணாமல்
இன்று நடுச் சாமம் திடீரென
வாசலில் வந்து நின்றது மழை!
*
நீண்ட நாட்களின் பின்
சந்தித்த சந்தோசத்தில்
மழையும் மரமும்
விடிய விடிய கண் விழித்து
மெதுவாகவும் சத்தமாகவும் பேசிக்கொண்டிருந்ததில்
நானும் குளிர்ந்து போனேன்!
*
ராவு முழுக்க
மரம் தின்று குடிப்பதற்கு
நிறையவே சாமான்கள்
கொண்டு வந்து கொடுத்திருந்தது மழை!
அதை மிச்சம் வைத்திருந்து
ஒரு வாரத்திற்கும் மேல் உபயோகப் படுத்திக் கொள்ளும்
மரம்!
*
நான் எதற்கு
இன்று காலை அவசரப் பட்டு
தேநீர் பருக்கிவிட வேண்டும் மரத்திற்கு?
03-01-2016
-எம்.எல்.எம்.அன்ஸார்

