(எம்.ரி.எம்.யூனுஸ்)
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழ் இயங்கும் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலை அல்குர்ஆன் மனனப் பிரிவினது நான்காவது சான்றிதழ் வழங்கும் விழாவும் நீண்ட காலம் சன்மார்கப் பணியாற்றிய ஆலிம் மற்றும் நீண்ட காலம் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையில் சேவை புரியும் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு தாறுல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் 25.03.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6.15 வரை பெண்களுக்கும் மாலை 6.45 தொடக்கம் 9.30 மணி வரை ஆண்களுக்கும் நடைபெறவுள்ளது.
இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய தலைவர் அஷ்ஷெய்க் ABM.அலியார் (றியாழி) MA தலைமையில் நடைபெறவுள்ள பெண்கள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட பீடாதிபதி கலாநிதி MIS.ஸபீனா அவர்களும் ஆண்கள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் MMM.நாஜிம் அவர்களும் சிறப்புப் பேச்சாளராக தென் இந்திய சழூகநீதி முரசு ஆசிரியர் சகோதரர் CMN.சலீம் MA கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

