மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் மட்/நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு விஜயம்.

Written By avathani Media Network on Sunday, March 27, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு விசேட விஜயமொன்றை கிழக்கு 
மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த வியாழன்று (24.03.2016) 
மேற்கொண்டார்.

அதன்போது பாடசாலை அதிபர் திரு. உதயகுமார், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்ததுடன் பாடசாலை கட்டிடங்களை பார்வையிட்டார்.

இப்பாடசாலை தரம் 9 வரை கிட்டத்தட்ட 60 மாணவர்கள் கல்விகற்கின்றனர் என்றும், 
கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகவும், கூரைகள் பழுதடைந்தும் இருப்பதனை பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டி அதன் காரணத்தினால் கல்வி செயற்பாடுகளில் பல்வேறு 
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளோம் எனவே அதனை சீர்செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார், 

அதனைத் தொடர்ந்து உடனடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய 
மாகாண உதவி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களை தொலைபோசியினூடாக தொடர்பு கொண்டு 
பாடசாலையின் அவல நிலையை தெரிவித்தார், அதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய மாகாண உதவி திட்டமிடல் பணிப்பாளர் எதிர்வரும் வாரம் 
இப்பாடசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு பாடசாலையின் நிலைமையை பார்வையிட்டு 
பாடசாலை கட்டிடங்களை சீர்செய்ய நடவடிக்கை மோற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் இலவசமாக வழங்கப்பட்ட சீருடை துணிகளை தைக்க வசதியற்ற வறிய குடும்பத்தை சேர்ந்த பல மாணவர்கள் இங்கு கல்விகற்கின்றனர், அவர்கள் அனைவரினதும் சீருடைகளை 
தைப்பதற்கான முழு செலவையும் மற்றும் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 
புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வினா விடை தாள்கள் அடங்கிய தொகுப்பினையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக 
வாக்குறுதியளித்தார். மேலும் இப்பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பத்தை 
சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சினூடாக இலவச 
அப்பியாசக் கொப்பிகள் வழங்க ஆவனை செய்யுமாறு விவசாய அமைச்சர் கௌரவ
துரைராஜசிங்கம் அவர்களை தொலைபோசியினூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது வேண்டுகோளினை ஏற்று இப் பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை விரைவில் வழங்குவதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.

மோலும் ஆசிரியர்களுக்குகான 
தளபாடங்கள் பழுதடைந்த நிலையில் பற்றாக்குறையாக காணப்படுகிறது, எனவ அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் 2016ம் ஆண்டின் 
நிதியொதிக்கீட்டிலிருந்து 50,000.00 ரூபாவினை வழங்குவதாக வாக்குரிதியளித்தார்.

மேலும் எதிர்காலத்தில் இப்பாடசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு 
முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.