எழுத்தாளர் நாகூர் கனிக்கு முன்னாள் அமைச்சர் அஸ்வர் வாழ்த்து

Written By avathani Media Network on Thursday, March 24, 2016


(எம்.எஸ்.எம்.சாஹிர்)

இலங்கையின் பிரபல எழுத்தாளர் காதிபுல் ஹக் எஸ்.ஐ. நாகூர் கனிக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவில் இயங்கும் பிரபல அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் நடாத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றதனையிட்டு முன்னாள் முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


எழுத்துறையில் பல சாதனை புரிந்துள்ள அவருடைய திறமையைப் பார்த்துத்தான் ஹாதிபுல் ஹக் என்ற பட்டத்தை முஸ்லிம் கலாசார அமைச்சராக இருக்கும் போது “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப் பொருளில் அவரைக் கௌரவித்தேன் என்பதை மீட்டிப் பார்க்க விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.