காத்தான்குடி சிறுமி விவகாரம்.. மஜீத் றப்பாணி மற்றும் மனைவி மும்தாஜுக்கு பிணை மறுப்பு!

Written By avathani Media Network on Thursday, March 24, 2016




(ஜுனைட்.எம்.பஹ்த்)


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று 24.03.2016 வியாழக்கிழமை 
பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட போதே மேற்படி இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதாவான் நீதிமன்ற நீதிபதி M .கணேசராஜா கடந்த 14ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

மேட்படி இருவருக்கு பிணை வழங்கக் கூடாது என கடந்த 21.03.2016 ம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பெருந்திரலான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.