கடந்த 2016.03.09 ம் திகதி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களும் அவரின் வெளிவிவகார செயலாளர் அன்ஸார் அவர்களும் குவைட் உயர் ஸ்தானிகர் இல்லத்தில் குவைட் உயர் ஸ்தானிகர் கலாஹ் பூ ஜாஹிர் அவர்களை சந்தித்து அனுராதபுர மாவட்ட மக்களின் குறைகளை பற்றி கலந்தாலோசித்தனர்.
அன்றைய தினம் அனுராதபுர மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 50 வீடுகளை உள்ளடக்கியதான கிராமம் ஒன்றை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் குவைட் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளததாக கூறியதுடன், இதற்கு தேவையான இடத்தை தெரிவு செய்யுமாரு அனுராதபுரமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களிடம் கூறினார்∙
இது மட்டுமின்றி வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனுராதபுர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக கூறியதுடன் அனுராதபுர மக்களின் சிறுநீரக நோய் பற்றி கூறிய போது இதற்காக கூடிய கவனம் எடுப்பாதாக உருக்கமாக கூரியதுடன் சகல கிராமங்களுக்கும் நீர் சுற்றிகரிப்பு இயந்திரங்களை பெற்றுத் தருவதாகவும் கூறினார்∙

