பாதாள குழுக்களை அடக்க ஜனாதிபதி பணிப்புரை

Written By avathani Media Network on Sunday, March 6, 2016



பாதாள உலக குழுக்களை அடக்க தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாரஹேன்பிடவிலுள்ள அபயராம விகாரையில் வைத்து குறிப்பிட்டுள்ளார். 

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு அதி உயர்ந்த அளவிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாராஹேன்பிட்டி அபயராம விகாரை அறநெறி பாடசாலையின் 78 வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு வைபவத்தில், பிரதம அதிதியாக இன்று ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இதேவேளை, இந்த வைபவத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.