இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பிரபல எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் உடனான விசேடகலந்துரையாடல்

Written By avathani Media Network on Sunday, March 6, 2016



                                                  



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் உடனான விசேட கலந்துரையாடல்ஒன்று கடந்த 04.03.2015 அன்று இரவு 07 மணி முதல் 09 மணி வரை காத்தான்குடி பிஸ்மி தலைமைக் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.



காத்தான்குடியில் இயங்கி வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் சிரேஷ்ட உறுப்பினரும்,விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைரூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விஷேட கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஊர்பிரமுகர்கள், புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், உலமாக்கள், இளைஞர்கள், இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் உட்படபலரும் கலந்து கொண்டனர்.



இங்கு 'மத்திய கிழக்கு நடப்பு அரசியல் போக்கும் மனித உரிமைக்கான போராட்டங்களும்' எனும் தலைப்பில் உரையாற்றியஅ.முத்துகிருஷ்ணன் அவர்கள் விசேடமாக காஸா கரவானில் தான் பங்குபற்றிய தனது அனுபவங்களையும் சுவாரஷ்யமாக பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.