மாணவன் ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வரிசையில் செல்லுமாறு எச்சரித்ததை அடுத்து,அதே பாடசாலையைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கோபமடைந்து அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆசிரியர் மீது எறிந்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட மாணவனின் தாய் அதே பிரதேசத்திலுள்ள வேறொரு பாடசாலையில் அதிபராக பணிபுரிபவர் எனவும் தெரிய வந்துள்ளது.

