இளைஞனின் மரணமும் - சம்பந்தம் இல்லாமல் பேசும் முட்டாள்களும்

Written By avathani Media Network on Sunday, March 13, 2016

இன்று ஏறாவூரையே - அதிர வைத்தது - ஒரு இளைஞ்சனின்திடீர் மரணம்- வழமை போல் தூங்கச் சென்றவர் காலையில் ஜனாஸாவாக தான் இருக்கிறார்-

காதில் ஹெட் போன் போட்டுக் கொண்டு -போனை சார்ச் செய்த வேளை மின்சாரம் தாக்கியதால் மரணம் என பொலிசாருக்கு அழைப்பு வருகிறது
திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் அதே தகவல் பரிமாறப்படுகிறது 
ஊரில் பரவலாக கதை பரவுகிறது -
அழைப்புக்கள் வருகின்றன - 
ஆரம்பத்தில் தகவல் இந்த வகையில் தான் -
காட்டுத் தீ போல் பரவுகின்றது -
--------------
பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து விட்டு - 
18 வயது இளைஞ்சன் திடீர் மரணம் என்பதாலும் - ஏற்கனவே பொலிசாருக்கு 119 மூலம் வழங்கப்பட்ட தகவலுக்கும் சம்பவ இடத்தில் கிடைத்த தகவலுக்கும் முரண்பாடு உள்ளது என்பதாலும்- மரணத்திற்கான காரணம் தெரியாது என்பதாலும் மேலதிக விசாரணைக்காகவும் 
மரணத்துக்கான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டிய தேவை இருப்பதாலும் , நீதிமன்ற அனுமதியை கோருவதற்காக பொலிசார் புறப்பட்டு செல்கின்றனர் -
(இவ்வாறான மரணங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு - இரசாயன பகுப்பாய்வுகளும் மேட்கோள்ளப்பட்ட பின்பே சடலம் ஒப்படைக்கப்படுவது வழமை -)
இது எல்லாம் நடந்த பின்பே - 
சமூக வலைத் தளங்கள் ஊடாக தகவல் பறக்கிறது .
செய்தியை பார்க்கிறார்கள் எங்கள் போராளிகள் - விழுந்தடித்துக் கொண்டு ஓடிப் போய் அங்கு நடந்ததை விசாரிக்கிறார்கள் - இது இயற்கை மரணம் தான் என்று பிந்தி சென்று விசாரிக்கும் எவருக்கும் தெரிய வரலாம் - ஒரு திடீர் சம்பவம் தொடர்பில் எப்போதும் அப்படித் தான் நடக்கும் - இது இயல்பு ஆரம்பத்தில் போலிசுக்கு அழைப்பை ஏற்படுத்தியவர் தனது அனுமானத்தில் அப்படி சொல்லி இருக்கலாம் - ஏனெனில் இயற்கை மரணம் இளைஞ்சர்களுக்கு வராது என்ற கோணத்தில் அவர் தன கண்ணில் கண்ட காரணத்தை வைத்து அனுமாநித்திருப்பார், அதையே அடுத்தவருக்கும் பொலிசாருக்கும் தெரியப் படுத்தி இருப்பார் போன் கதை முதலில் வந்ததால் அதைப் பற்றி கதைத்தார்கள் - இல்லை என்றால் இப்போது வரைக்கும் கூடி கூடி கண்டதையும் கேட்டதையும் , ஊகத்தையும் வைத்து 1000 கற்பனைக் கதைகள் ஊரில் பரவிக் கொண்டிருக்கும் - அல்லாஹ் அந்த இளைஞ்சனின் கப்ரை விசாலமாக்கி மேலான சுவர்க்கத்தை அருள வேண்டும் - 
அவர் மரணித்து விட்டார் - - இறைவனின் நாட்டத்தில் நடந்து முடிந்து விட்டது - ஆனாலும் நாட்டின் சட்ட திட்டங்களும் - எதிர் காலத்தில் வரும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் சட்டம் தன கடமையை செய்தே ஆகும் -
அந்த வகையில் குறித்த இளைஞ்சனின் மரணத்திலும் பிரேத பரிசோதனை நடத்தப்படுவது என்பது எவர் பேசினாலும் - முயற்சி செய்தாலும் நிறுத்த முடியாத ஓன்று ஏனெனில் சட்டம் தற்போது முறையாக அமுல் படுத்தப் பட்டு வருகிறது - அதிலும் 18 வயது இளைஞ்சன் திடீர் மரணம் எனும் போது அதன் நடைமுறைகள் சற்று இருக்கமானதாகவே இருக்கும் -
இந்த சட்ட நடைமுறைகள் எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் -சில முட்டாள்கள் தங்கள் மேதாவித் தனத்தையும் மடைமையையும் காட்டும் வகையில் மக்களை எல்லாம் மடையர்கள் என்று நினைத்து ஒரு புது புரளியை கிளப்பி விட்டுள்ளனர் -சமூக வலைத் தளங்களில் செய்தி வந்ததால் தான் சடலம் பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பிற்கு அனுப்ப பட்டதாக கூறுகிறார் - நடைமுறையே தெரியாமல் பிதற்றுகிறார் -

ஒரு சிறு உதாரணம் - ஏறாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண் நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுகிறார் - சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு நாள் அதிகாலையில் அவர் மரணிக்கிறார் - அவரின் நோய்க்கான எந்த மருத்துவ அறிக்கைகளோ , அவர் கிளினிக் செல்வதற்கான எந்த அட்டைகளோ அவரிடம் இல்லை - அவர் வைத்தியசாலையில் தான் மரணிக்கிறார் - குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை கொண்டு வர கோரிய போது பிரேத பரிசோதனைகள் முடிந்த பின்பே சடலம் ஒப்படைக்கப்படும் என வைத்திய சாலை - மரணித்தவர் ஒரு அரசியல் பிரதிநிதியின் நெருங்கிய உறவினராக இருந்தும் - அரசியல் வாதியே நேரடியாக வந்து கேட்ட போதும் - வைத்திய சாலையில் மரணித்தாலும் - காரணம் தெரியாது என்பதால் பிரேத பரிசோதனை முடித்தே தரலாம் என்று கூறி அன்று இரவே சடலத்தை ஒப்படைக்கின்றனர் -
இதற்கும் அப்பால் - வாகன விபத்தில் மரணிப்பவர்களாக இருந்தாலும் சரி -நீரில் மூழ்கியோ சரி - எந்த ஒரு திடீர் மரணத்திற்கும் , காரணம் தெரியாத மரணத்திற்கும் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு தான் சடலம் வழங்கப்படுகிறது -அப்படி இருக்கையில் ஒரு இளைஞ்சன் மரணித்ததட்கான காரணம் தெரியாமல் எவ்வாறு இலகுவாக ஜனாஸாவை சட்டம் நோக்கும் - இந்த யதார்த்தம் தெரியாமல் ஒருவர் முகப்புத்தகம் வாயிலாக ஏதேதோ சொல்கிòறார் - 
குறித்த இளைஞ்சனின் மரணத்தில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த விதம் குறித்து பேசி அதற்கான உண்மை விளக்கத்தை கொடுப்பதை விட்டு விட்டு - நடைமுறை சாத்தியம் அற்ற ஒரு விடயத்தை சொல்லி உங்களின் முட்டாள் தனத்தை நிரூபிக்க முற்பட வேண்டாம் -
அன்பின் நண்பர்களே !
அல்லாஹ்வின் நாட்டம் - அவர் மரணித்து விட்டார் - சட்டத்தின் வரையறையை தாண்டி எதுவும் நடந்து விட முடியாது தங்களின் இயலாமையை மறைத்து அதற்காக நொண்டி சாக்கு கூறும் முட்டாள்களின் கதைகளுக்கு பின்னால் எல்லாம் செல்லாமால் - அவரின் மறுமை வாழ்விட்காவும்- ஈடேற்றத்திட்காகவும் அல்லாஹ்வை பிராத்திப்போம் - 
இந்தப் பதிவிற்கும் தேவை அற்ற கமெண்ட்ஸ் களை பதிவதை விட்டு விட்டு - அந்த இளைஞ்சனின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்யுங்கள் -
Mohamed Azmy யின் முகநூலில் இருந்து
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.