நாடாளுமன்றப் பணிகளை மறந்து நாணயத்தின் மீது சவாரி செய்யும் பிரதிநிதிகள்

Written By avathani Media Network on Thursday, March 17, 2016

(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
"அரசியல் அமைப்பி;ன் ஏற்பாடுகளுக்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட இருநூற்றி இருபத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமொன்று இருத்தல் வேண்டும்'.(அரசியலமைப்பு அத்தியாயம் 10இ உறுப்புரை 62.1)

நமது நாட்டின் நடைமுறை அரசியலமைப்புக்கு 1988 மே மாதம் 24ஆந் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான பதினான்காவது திருத்தச்சட்டம் மேற்படி தெரிவிக்கின்றது. இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நூற்றுதொன்னுற்றாறு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தன. 

1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நமது நாட்டுக்கான முதலாவது குடியரசு அரசியலமைப்பின் படிஇ சட்ட ஆக்கத்துறையை ஓரங்க சபையாக மாற்றி அதற்கு ' தேசிய அரசு பேரவை' எனப் பெயரிடப்பட்டது. இதுவே அரச அதிகாரத்தின் மீயுயர் கருவியாக விளங்கியது. இவ் அரசியல் திட்டத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சோல்பரி யாப்பில் சட்டமியற்றும் துறையான பாராளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் சபைஇ செனட் சபை எனும் இரண்டு சபைகளைக் கொண்டிருந்தது.

இதனை நமது நாட்டில் 1978இல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டமியற்றும் சபையாக இருந்த தேசிய அரசுப்பேரவை எனும் பெயரை மாற்றி முன்னர் இருந்ததைப்போன்று பாராளுமன்றம் என பெயரிடப்பட்டது.

இதனூடாக நாடாளுமன்றத்தின் முக்கிய பணிகளில் சட்டமியற்றுதல் முக்கிய பணியும் முதன்மையானதும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. மற்றும் கடந்த காலத்தையும் உள்ளடக்கக் கூடிய வகையில் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தினை கொண்டுள்ளது. எந்த சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இதனடிப்படையில் இதன் சட்டவாக்க செயற்பாட்டுக்கு நேரடியாக எந்தத் தடையும் கிடையாது. 

'கடந்த காலத்தையும் உள்ளடக்கும் பயன் கொண்ட சட்டங்களை ( அரசியல் அமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை நீக்கும் அல்லது திருத்தும்இ அல்லது அரசியல் அமைப்புக்கு ஏதேனும் புதிய ஏற்பாட்டை சேர்க்கும் சட்டங்கள் உட்பட்ட சட்டங்களை) ஆக்குவதற்குப் பாராளுமன்றம் தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும்'. (அரசியலமைப்பு அத்தியாயம் 10இ உறுப்புரை 75).

இவ்வாறு கடந்த காலத்தையும் உள்ளடக்கி சட்டமியற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு இவ்வுறுப்புரை நல்கிய போதிலும்இ அதில் விதிவிலக்காக எது குறித்து கடந்;த காலத்தை உள்ளடக்கியதாக சட்டமியற்றக் கூடாது என்பது பற்றியும் மேற்படி உறுப்புரையில் பின்வருமாறு விளக்கம் தருகின்றது. 

75.1. ஆயின். பாராளுமன்றமானது பின்வரும் சட்டங்களை ஆக்குதல் ஆகாது.இ அதாவது:-

(அ). அரசியலமைப்பை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இடைநிறுத்தி வைக்கின்ற ஏதேனும் சட்டத்தைஇ அல்லது 

(ஆ). இயற்றப்படுகின்ற சட்டமானது ஏலவே உள்ள அரசியலமைப்பை மாற்றீடு செய்கின்ற ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றினால் ஒழியஇ அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குகின்ற ஏதேனும் சட்டத்தை ஆக்குதலாகாது.

கடந்த காலத்தையும் உள்ளடக்கி சட்டமியற்றும் பண்பைப் பொறுத்தவரை அரசியல் பழிவாங்கலுக்கும் வழிவகுக்க முடியும் என்ற விமர்சனம் இது குறித்த இச்சட்டம் இயற்றிய அன்றைய காலகட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இசைவாக முன்னர் ஆட்சியில் இருந்தவர்களை பழிவாங்கும் வகையில் சட்டங்களை ஏற்றும் முயற்சிகளில் ஈடுபடும் அபாயம் உள்ளது என அச்சம் கொண்டவாறு சில நகர்வுகள் முன்னெடுக்கப்படும் சாத்தியங்களும் இன்று காணப்படாமலும் இல்லை. 

என்றாலும் அரசியலமைப்புடன் தொடர்புடைய மசோதாக்களைப் பொறுத்தவரை அம்மசோதா அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பதை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு உண்டு. குறிப்பிட்ட மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட முன்னரே உயர் நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பினை அளித்தல் வேண்டும்.

பாராளுமன்றம் தனது சட்டவாக்கத் தத்துவத்தை துறத்தலோ அல்லது வேறு நிறுவனங்களிடம் கையளித்தலோ கூடாது என்றும் அரசியலமைப்பு திட்டவட்டம் செய்கின்றது. பதிமூன்றாவது திருத்தத்தின் ஊடாக சில சட்டமியற்றும் அதிகாரத்தினை மாகாண சபைக்கு பகிர்ந்தளித்தும் உள்ளது. அதே நேரம் நாடாளுமன்றத்துக்கு புறம்பாக ஜனாதிபதி மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலமும் நாட்டுக்கு தேவையான சட்டங்களை உருவாக்க முடியும் என்ற அனுமதியையும் முன்வைத்துள்ளது.

'மக்களின் இறைமை பின்வரும் விதமாகப் பிரயோகிக்கப்படவும் அனுபவிக்கப்படவும் வேண்டும்:-

(அ). மக்களது சட்டமாக்கற்றற்றுவம்இ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்;ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்'. (அரசியலமைப்பு அத்தியாயம் 1இ உறுப்புரை 4.அ)

ஆகவேஇ பாராளுமன்றத்தின் முக்கிய பணிகளில் சட்டமியற்றுதல் முதன்மை இடத்தை வகிக்கின்றது. இதனால் சட்டசபைக்கு நமது பிரதிநிதிகளாக அனுப்பிவைக்கப்படும் உறுப்பினர்களிடம் சட்டம் பற்றி அறிதல் அது குறித்த விரிவான தேடல்கள் அவசியப்படுகின்றது. இதற்கு இசைவானவர்களை நாம் நமது நாடாளுமன்ற பிரதிநிதிகளாக அனுப்பி வைக்கின்றோமா என்பது மிக முக்கியமான பக்கமாகும். 

இப்படி நாடாளுமன்றத்தில் முக்கியமான பக்கங்களில் நமக்கான குரலாக செயற்படும் நமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் பொறுப்புடன் முஸ்லிம் மக்களாகிய நாம் செயற்பட வேண்டிய கடமைகளை உதாசீனம் செய்து விடுவோமானால்இ நாடாளுமன்றத்தின் ஊடான பல சட்டங்கள் நம்மை நசுக்கிவிடும் பரப்புக்கு இட்டுச்சென்று விடும். இதன் ஆட்படுத்துதலில் இருந்து நாம் விடுபடுவதும் பின்னர் கஷ்டமாகிவிடும். இதேபோன்ற பல நிகழ்வுகளையும் நாம் சந்தித்து இருக்கின்றோம்.

கடந்த கால நிகழ்வுகளை முன்னிறுத்தி அல்லது அதனை நமக்கான பாடங்களாக எடுத்துக்கொண்டு மிகவும் வலிமைப்படும் வகையில் நமது சட்டமன்றத்துக்கு நமது பிரதிநிதிகளாக யாரை அனுப்பி வைப்பதன் மூலம் நமது சமூக நலன்கள் வெற்றிகொள்ளப்படல் தங்கியிருக்கின்றது என்கின்ற முன் ஜாக்கிரதை செயற்பாட்டையும் நமக்கு அவசியப்படுத்துகிறது.

உண்மையில் நமக்கும் நாட்டிற்கும் நலன்வகிக்கும் வகையில் நமது நாட்டு அரசாங்கம் உருவாக்கப்படவேண்டும் என்கின்ற கருத்தாடலில் நாம் இன்று பெரும்பாலும் சார்ந்து நின்றாலும் அதனை செயல் வடிவமாக்கி பயன்களை அடைந்து கொள்வதில் குறுக்கீடு செய்யும் காரணிகளின் தோற்றப்பாட்டை சரியாக அடையாளம் கண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான முன்முயற்சிகளும் இன்று தேவைப்படுவதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

நமது நாட்டில் பெரியஇ சிறிய அரசியல் கட்சிகள் என பல இருக்கின்றன. தேர்தல்களில் போட்டியிடுவதற்காக கட்சிகளின் தேவை மறுக்க முடியாது. அந்த வகையில் குறித்த ஒரு வேட்பாளர் தனது தேர்தல் களத்தை சந்திப்பதற்காக கட்சியினுடைய தேவையின் ஈடுபாட்டை கைக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் உள்ளது. 

இதற்காக வேண்டி தேர்தல் காலங்களில் வேட்பாளர்களாக நிற்பதற்காக வேண்டி கட்சிகள் நடத்தும் வேட்பாளர் நேர்முக பரீட்சைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அத்தகைய சூழல்களில் தங்களது திறமைகளைஇ அனுபவ முதிர்ச்சிகளைஇ ஆளுமைப்பாங்குகளை வெளிப்படுத்தினாலும் கூட வேட்பாளராக நிறுத்துவதற்கு நமது மக்கள் செல்வாக்குடைய பல கட்சிகள் வேறொரு வகையில் குறித்த வேட்பாளர்களை கையாள்வதற்கு தயாராகுகின்ற நிலைமையும் தான் வெகுவாக நமது நாட்டு அரசியல் அரங்கில் பரவிக் காணப்படுகின்றது. 

தேர்தலில் போட்டியிட விரும்பும் அபேட்;சகர்களிடம் இருந்து கட்சியின் தேர்தல் செலவுக்காக எவ்வளவு பணம் ஒதுக்க முடியும் என்பதையும் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக எவ்வளவு பணத்தைஇ பொருளை செலவிடுவார் என்பதையும் உள்வாங்கிக்கொண்ட பின்னர் தான் குறித்த நபரை வேட்பாளராக களமிறக்க கட்சிகள் விரும்புகின்ற ஒரு நகர்வும் காணப்படுகின்றது.

ஒரு கட்சியின் வேட்பாளராக நிற்பதற்கு பணப்பலம் முதல் தகுதியாக இன்று மாற்றம் பெற்றிருக்கின்றது. இதனைச் சுற்றியே அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் செயற்பாடுகள் இயங்குதளத்தை அடைந்திருக்கின்றது. இது மக்கள் நலன் சார்ந்த அரசியல் களத்தை வேறொரு திசையை எய்திக்கொள்வதற்கு வழிவிடுவனவாகவே அமைய முடியும்.

உண்மையில் ஒரு வேட்பாளருக்கு மக்கள் செல்வாக்கினை அதிகரிக்கச் செய்வதற்கு மக்கள் ஆதரவினை கூட்டும் பக்கமான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் மனோவியல்புகளைச் செய்வதற்கு பதிலாகஇ எவ்வளவு பணத்தை செலவளித்து மக்கள் ஆதரவை பெருக்கிக்கொள்ள முடியும் என்கின்ற கணக்கை அசைபோட்டுப்பார்க்கும் திசையில் நமது பிரதிநிதிகளும் திரும்பி விடுகின்றனர்.

அது மாத்திரமன்றி தான் இன்று எதிர்கொள்ளும் தேர்தலில் தனது வேட்பாளர் பதவியை உறுதி செய்வதற்கு கட்சி மற்றும் தேர்தல் களத்தில் மக்களுக்காக செலவிடும் தொகைப்பணத்தை மட்டும் ஆயத்தப்படுத்துகின்றனர் என்றால்இ அவனது அடுத்த தேர்தலுக்கு இன்று தேவைப்படும் பணத்தை விடவும் அதிகரித்த பணத்தேடல் வேண்டும் என்கின்ற கருத்தினுள் அகப்பட்டு அதனைக் குறியாக வைத்து பணத்தேடலை ஆழமாக வசீகரிக்கும் இயல்புக்குள் தன்னை வசப்படுத்திக்கொள்ளவே முனைவான்.

இதனால் அவனது அரசியல் நகர்வு என்பது மக்கள் நலன் சார்;ந்தும் கட்சி கரிசனை சாய்ந்தும் தன்னை உருவகப்படுத்திக்கொள்வதற்கு பதிலாக அடுத்து வரும் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பணம் ஒன்றே போதுமானது என்ற எண்ணக்கருவுக்கு உட்பட்டு பணத்தை எந்த வழியிலேனும் திரட்டி குவித்துக்கொள்ளும் மையத்தை நோக்கிச் செல்வதை குறித்த நபரிடம் மேலோங்கச் செய்து விடும்.

இத்தகைய சூழல்கள் பெருகிக்காணப்படும் இன்றைய அரசியல் அரங்கில் நாம் எதிர்பார்க்கின்ற அல்லது பேசு பெருளாக்கி கருத்தாடல்களை விரித்திருக்கும் மக்கள் நலன்சார்ந்த நீதிஇ நியாயங்கள்இ அபிவிருத்தி போன்ற கூறுகளைக் கொண்ட மக்களாட்சி தோன்றுவதை எப்படி சாத்தியமாக்கி வைக்கும்?.

நல்ல திட்டமிடல்கள் செயலுருவாக்கம் பெறுவதற்கு தேவையான பொறிமுறைச் சூழல்கள் நிலவவேண்டும். அவ்வாறு இல்லாது வெறும் வார்த்தையில் அல்லது எழுத்தில்இ பேச்சில் இருப்பதனால் மட்டும் நிறைவெய்திவிடாது. மாறாக அதற்கான செல்நெறிகள் வகுக்கப்பட்டு அதற்குள் பயணிக்கும் நிலையை முதலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க முன்வர வேண்டும்.

இத்தகைய இசைவுகள் நீட்டப்படுகின்ற போதுதான் அரசியல் களத்தில் வேட்பாளர்களாக தம்மை நிலை நிறுத்துவதற்கு நல்லெண்ணம் கொண்டவர்களும் மக்கள் சேவை புரியவேண்டும் என்ற திடத்தை கொண்டவர்களின் அரசியல் பிரவேசம் முன் நகர்த்தப்படும். இல்லையேல் கட்சிகளின் பிழையான எடுகோள்களின் பின்னால் அதே துர்க்குணத்தை விரும்புவோர்களினால்தான் நிரப்பப்படும் கைசேதமான நிலையையே நமக்கு நிலைப்பேறாக்கி வைக்கும்.

நமது இன்றைய நாட்டுச் சூழலில் கையூட்டலுடன் தொடர்பில்லாத அரசியல் வாதிகளும் ஊழல்இ மோசடிகளில் ஈடுபடாத நமது பிரதிநிதிகளும் இருக்க வேண்டும் என்கின்ற எமது நியாயபூர்வமான எதிர்பார்ப்புக்கள் யாவும் வெறும் கதையாடல்களாகவும் கருத்தாடல்களாகவும் காணப்படுவதற்கு முக்கிய காரணியாக நம்மத்தியில் காணப்படும் பல கட்சிகளின் அனுகுமுறைமைகளும் அதற்கு இசைவாக வேட்பாளர்களும் தம்மை நகர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருப்பதும் ஆகும்.

அப்படியாயின் நமது நாட்டு அரசியல் சூழலில் மாற்றம் என்பது நமது அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தெரிவிலும் அபேட்சகர்களை களமிறக்கும் அனுகுமுறைமைகளிலும் மாற்றங்களுக்கான பொறிமுறைகள் திட்டமிடப்படுவதை வரையறுக்கின்றது. இதில் ஏற்படும் தளர்ச்சியும் தொய்வும் தான் நமது மக்கள் மீது சுமர்த்தப்படுகின்ற சுமைகளாகவும் அமைகின்றது. இந்நிலை அகற்றப்படுவதற்கான முன்னகர்ச்சிகள் துரிதமாக கட்டமைக்கப்படுவதை இது வலியுறுத்துகின்றது.

அதேநேரம் நமது நாட்டு மக்களில் குறிப்பிட்ட தொகையினர் தமது வாக்குரிமையின் பலத்தையும் அதன் அடிப்படைகளையும் உதாசீனம் செய்துவிட்டுஇ அந்தத் தருணத்தில் தேவைப்படும் அற்பத் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து கொள்ளும் வகையில் குறித்த வேட்பாளர்களால் வழங்கப்படும் அன்பளிப்புகளை வாரி எடுத்துக்கொண்டு அதற்கு தமது வாக்குகளை கைமாறாக செலுத்துகின்ற ஈனச்செயற்பாட்டை பெருமிதமாக செயற்படுத்தியும் வருகின்றனர்.

இத்தகைய மக்களினாலும்இ நாம் நியாயமாகஇ நீதியாகஇ நேர்மையான மக்கள் சேவையை குறியாகக்கொண்ட நல்லாட்சி துலங்குவது தூரமாகி விடுகிறது. அதேநேரம் அரசியல் பிரதிநிதிகளாக மாறுவதற்கு களமிறங்க விரும்பும் வேட்பாளர்கள் மக்களை வழைத்துப்பிடிக்கும் பக்கமே தமது கவனங்களை மிகுதியாக செலுத்தவும் முன்வருகின்றனர். 

இப்படியான இழிநிலைகளும் பிழையான அனுகுமுறைகளும் எமது அரசியல் கட்சிகளிடமும் நமது வாக்காள மக்களிடமும் பெரிதாக வளர்க்கப்பட்டு வருவதினால் நாம் காணத்துடிக்கும் மாற்றங்கள் எதுவும் அடைவதில் இருந்து பின்னடைவை நோக்கி நகரத்தொடங்குவதன் ஒரு கோணமாகும்.

இதன் இன்னொரு விகார வடிவமாகத்தான் நமது சட்டமன்றமான நாடாளுமன்றத்தில் ஆற்றுப்படுத்த வேண்டிய பணிகள் குறித்த ஆளுமைகளை கொண்டவர்களை நமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் தெரிவுமுறைமையிலும் ஒரு பின்னோக்கிய நகர்வையே இயலுமாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் தேர்தல் முறைமையில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் தொகுதி ரீதியான முறைமையில் கூட கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். ஒரு கட்சி ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதனால் வேட்பாளரைப் பார்க்கினும் கட்சிகளே முக்கியத்துவம் பெறும். இதனால் கட்சிகள் வேட்பாளரிடம் எதிர்பார்க்கும் கட்சித்தேர்தல் செலவுகளிலும் கேள்விகள் அதிகரிக்கும். 

அதிலும் மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்றால் வேட்பாளரின் வெற்றியும் நிச்சயி;க்கப்பட்டதாக இருக்கும். அதனாலும் கட்சிக்கான மதிப்பும் அதற்கான வேட்பாளரின் சன்மானமும் அதிகரிக்கப்பட்டதாகவும் ஆகிவிடும் அபாயமும் இதில் பெருகிவிடுவதற்கே வாய்ப்புக்கள் அதிகமாகும்.

எது எவ்வாறிருந்தாலும் நமது நாடாளுமன்றத்தின் முக்கிய பணியான சட்டமியற்றும் அதிகாரத்தின் ஊடாக மக்களைப் பாதிக்கும் வகையில் கூட சில சந்தர்ப்பங்களில் சட்டமியற்றப்படும் நிலை ஏற்படுவதுண்டு. அதனை தட்டிக்கேட்கவும் அல்லது சில திருத்தங்களை முன்மொழிந்து அதனை ஏற்கச் செய்வதில் நமது மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டாத பல சந்தர்ப்பங்களையும் நமது நாடாளுமன்றம் கண்டிருக்கின்றது.

நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவரவர் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பவர்கள் தமது பொறுப்புக்களை சரியாகவும் செவ்வையாகவும் நிறைவேற்றுவதற்கு தம்மை தயார் படுத்த கூடியவர்களை மக்களாகிய நாம் பாராளுமன்றத்திற்கு தெரிந்தனுப்பும் நிலையினை தோற்றுவிக்காத வரை நாடாளுமன்றத்தின் முக்கிய பணி நிறைவேற்றப்படாதும் நாணயத்தின் மீதான அரசியல் உச்சத்தை அடைந்து அதற்கு இரையாகிப்போகும் கட்சிகளையும் பிரதிநிதிகளையுமே நமது நாடு நிலையாக சுமந்து நிற்கப்போவது மட்டும் உறுதியான சாமார்ச்சாரமேயாகும்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.