கடுவலை-வெலிவிட்ட போகஹவத்தை இலக்கம் 120இல் இயங்கும் அல் மத்ரசத்துல் ஜன்னா அஹதியா பாடசாலையின் ஓராண்டு பூர்த்தி விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வெலிவிட்ட ஜெரீனா முஸ்தபாவை அதிபராக கொண்டு இயங்கும் இந்த அஹதியா பாடசாலையின் மாணவர்களின் கஸீதா குழுப்பாடல் சன்மார்க்க உரைகள் நாடகம் என்பனவும் இடம் பெற்றன. அஹதியா பாடசாலையின் ஆசிரியர்களான அல் ஆலிமா ஹப்ஸா யூசுப் அல்ஆலிமா லதீபா முஸ்தபா ஆகியோர்இந்த பாடசாலை மாணவி மாணவிகளை நிகழ்ச்சிகளை அழகாக நெறிப்படுத்தியிருந்தனர்.
ருக்கையாத் மகளிர் அரபுக்கல்லூரியின் அதிபரான அஷ்ஷேக் அஸ்வர் அலி ஆலிம் ,மௌலவி ரியாத் பாரூக் ஆலீம் மற்றும் வெலிவிட்ட அல் மஸ்ஜிதுல் நூன் பள்ளிவாசலின் நிருவாகக்குழு தலைவர் அல்ஹாஜ் நெய்னா முஹம்மத், அல் மத்ரசத்துல் ஜன்னா அஹதியா பாடசாலையின் பணிப்பாளரான மொஹமட் முஸ்தபா ,நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியரும் முன்னாள் பல்கலைக்கழக பீடாதிபதியுமான கலைவாதி கலீல் இலங்கை வானொலியின் பிரபல பாடகரான ஜேசுரத்னம், அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் இறுதியில் பாடசாலை மாணவமணிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. விழா நிகழ்வுகளை பிரபல கவிஞர் கிண்ணியா அமீர்அலி தொகுத்தளித்தார்.







