நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நாடு முழுதும் ஆள் கொல்லும் 15 பாதாள குழுக்கள்

Written By avathani Media Network on Sunday, March 6, 2016



பாதாள உலக ஆயுத குழுக்களை அடக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதுதிலும் இருக்கும் 15 பாதாள உலக குழுக்கள் பட்டப்பகலில் கொலைகளை செய்யவும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளன.

இதனால், நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தொடர்பான பீதி ஏற்பட்டுள்ளது.

பாதாள உலக ஆயுத குழுக்களை ஒழிக்க பொலிஸாரிடம் முறையான வேலைத்திட்டம் இல்லை என்பதால், அந்த குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாதாள உலக குழுக்களை அழிக்கும் நடவடிக்கை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டதுடன் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் தலைமறைவாகி இருந்தனர்.

கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 50க்கும் மேற்பட்ட முக்கிய பாதாள உலக குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின், பாதாள உலக குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

பொலிஸாரால் தமக்கு எந்த உயிராபத்தும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதால், இந்த குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

பாதாள உலக ஆயுத குழுக்களை அழிக்கவும் குற்றவாளிகளை கைது செய்யவும் ஏற்படுத்தப்பட்ட பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவு, மிரிஹான விசேட விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்புக்கு குற்றத்தடுப்பு பிரிவு என்பன முற்றாக செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனுபவமிக்க அதிகாரிகள் நியமிக்கப்படாமை, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை உட்பட விடயங்கள் காரணமாக இந்த பொலிஸ் பிரிவுகள் செயலிழந்துள்ளன.


நாடு முழுவதும் பயங்கரமான 15 பாதாள உலக குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பில் இயங்கும் இரண்டு பிரபல பாதாள உலக குழுக்கள் தமக்குள் மோதல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.


தெமட்டகொட சமிந்த, புளுமெண்டால் சங்கா ஆகியோரின் பாதாள உலக குழுக்கள் இடையில் கடும் மோதல் நிலைமை உருவாக்கியுள்ளது.

இதனை தவிர சேதவத்தை, வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் தோன்றியுள்ள புதிய பாதாள உலக குழுக்கள் தமது எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன.

மினுவங்கொட, கம்பஹா, கட்டுநாயக்க, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டு செயற்படும் பாதாள உலக குழுக்களும் மோதலில் ஈடுபட்டுள்ளன.

தென் மாகாணத்தில் காலி, எல்பிட்டிய, தங்காலை பிரதேசங்களை மையமாக கொண்டு 9 பாதாள உலக குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.


கும்புறுபிட்டியே தனுஷ், தெவிநுவர சமில், ரத்கம பொடி சுஜி, பெதிகம உக்குவா, காலி மனோஜ் மெண்டிஸ், பொடி லசி, வீரகெட்டியே ஒக்ஸ்பேர்ட் ரத்நாயக்க ஆகிய பாதாள குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.