வறிய குடும்பத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு..

Written By avathani Media Network on Wednesday, March 23, 2016




(ஜுனைட்.எம்.பஹ்த்)


கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் விஷேட வேண்டுகோளின் 
அடிப்படையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வறிய 
குடும்பத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கும் நிகழ்வின் முதற் கட்டமாக திங்கள்கிழமை (21.03.2016) அன்று ஆரையம்பதி கர்பலா அல் மானார் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி
பாறூக், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் இணைப்பாளர் திரு. தங்கவேல், பாடசாலை அதிபர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் 
அவர்கள் இலங்கையிலுள்ள மாகான சபைகளில் மூவின ஒற்றுமையை சிறந்த விதத்தில் 
பிரதிநிதித்துவப்படுத்தும் மாகான சபை கிழக்கு மாகான சபையாகும்.

அதே போன்று மக்கள் மனதிலும் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள 
நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த 
வாய்ப்பை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், வறுமையினால் 
கல்வி கிடைக்கவில்லை என்ற நிலை எந்த மாணவருக்கும் வரக்கூடாது. அவ்வாறு 
வறுமையின் காரணமாக கல்விகிடைக்காமல் போயிருந்தால் நானும் ஒரு பொறியியலாளராக
ஆகியிருக்க முடியாது என்று தெரிவித்தார்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.