முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் EMERGENCY INFORMATION CARD. அறிமுகம்..

Written By avathani Media Network on Monday, February 29, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வரும் எமது முஹாசபா மீடியா நெட்வொர்க் மற்றுமொரு மனிதநல செயற்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.

EMERGENCY INFORMATION CARD. அதாவது நமது அன்றாட வாழ்வில் தேவைகளுக்காக பல இடங்களை நோக்கி பிரயாணம் செய்கிறோம். சில சந்தர்பங்களில் எமது பிரயாணத்தில் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ் ஆபத்தான நிலையில் எமது தகவல்களை உரிய உறவுகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வாகவே இவ் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது . 

இவ் அட்டையில் உங்கள் சுய விபரங்களுடன் உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தகவல்களை அறிவிக்க வேண்டிய மூன்று உறவினர்களின் தொலைபேசி இலக்கமும் சேர்க்கப்படும். அத்தோடு  முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ் EMERGENCY INFORMATION CARD ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகும். இவ் அட்டையினை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால்  EMERGENCY INFORMATION என குறிப்பிட்டு  உங்கள் பெயர் முகவரி என்பவற்றை  0770741849 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புங்கள்.
இன்ஷா அல்லாஹ் மேலதிக விபரங்கள்  விரைவில் தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும் .
ஜஸாகல்லாஹ்..
EMERGENCY INFORMATION TEAM.
MUHASABA MEDIA NETWORK.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.