முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கட்டணம் செலுத்தப்படாது விளம்பரம் ஔிபரப்பு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பொது முகாமையாளரிடம் இந்த விடயம் தொடர்பில் தற்போது வாக்கு மூலம் பதிவு செய்யப்படுவதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.
அதிகாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான முறைப்பாடு குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

