ஒரு புற்றுநோய் நோய் போல் பரவி வரும் செல்பி மோகம் அமெரிக்காவில் ஒரு சிறுமியின் உயிரை பறித்துள்ளது.
செல்போன் மூலம் தன்னைத் தானே எடுக்கப்படும் செல்பி மோகம், நாளுக்கு நாள் உலக நாடுகளில் ஒரு டிஜிட்டல் புற்றுநோய் போல் பரவி வருகிறது. நடக்கும் போது, சாப்பிடும் போது, ஆபிசில் வேலை செய்யும் போது சகலமும் செல்பி மோகமாக மாறியிருக்கிறது.
மற்ற நாடுகளி விட அமெரிக்கவில் அறுபது சதவீத இளைஞர்கள் செல்போன் மோகத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்று ஒரு பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், ஆண்களை விட பெண்களே செல்போனுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்ற ஆய்வும் சமீபத்தில் வெளியானதும்
அது ஒருபுறம் இருக்க, ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கப் போய், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
அதேபோல், செல்பி மோகம், ரஷ்யாவில் ஒரு சிறுமியின் உயிரை குடித்துள்ளது. மாஸ்கோ நகரில் தனது தாய் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வரும் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்பி மோகம் அதிகம்.
தன்னை அடிக்கடி செல்பி எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ள அந்த சிறுமி, சமீபத்தில் குளியல் அறைக்கு குளிக்க போயிருக்கிறாள். அங்கேயும் செல்பி எடுக்க ஆசைப்பட்ட அந்த சிறுமி, இதற்கென்றே ஒரு எக்ஸ்டென்சன் கார்டு ஒன்றை பயன்படுத்தி, அதன் மூலம் செல்போனில் செல்பி எடுத்திருக்கிறார்.
அப்போது, அவளது கையில் இருந்த செல்போன் தவறி தண்ணீரில் விழுந்துள்ளது. அதன்வழியாக மின்சாரம் அவளது உடலில் பாய்ந்துள்ளது. இதனால் உதவிக்கு கூட யாரையும் அழைக்க முடியாமல் அந்த சிறுமி அங்கேயே உயிரிழந்தாள்.
நீண்ட நேரம் ஆகியும் தன்னுடைய மகள் வெளியே வராததால், அவரது தாய் அவளின் பெயரை கூறி அழைத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் இல்லை. அதன்பின் கதவை உடைத்து உள்ளே சென்ற பின் தன்னுடைய மகள் இறந்து கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
செல்பி மோகம் சிறுமியின் உயிரைக் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

